நடிகர் பாலாவுக்கு ஆர்யா வாழ்த்து

28

தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது பலருக்கு தெரிந்திருக்காது. சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜீத்தின் தம்பியாகவும் இவர் நடித்திருப்பார். இவர் கொரோனா காலத்திலும் மற்ற நேரத்திலும் எண்ணற்றோருக்கு சைலண்ட்டாக உதவிகள் புரிந்துள்ளார். இது அவ்வளவாக மீடியாக்களில் வரவில்லை.

இருப்பினும் இப்படியான உதவிகள் புரிந்ததற்காக அமெரிக்காவில் ராயல் அமெரிக்கன் பல்கழைக்கழகம் பாலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

முன்பு இது போல விருது நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விருது வாங்கிய பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நடிகர் ஆர்யா பாலாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

பாருங்க:  தனுஷின் 43வது படம் அப்டேட்