நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்படம் 120 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அஜித்தின் அடுத்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க, வினோத்தே இயக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது. எனவே, தனது உடல் எடையை குறைத்து, தாடி, மீசை வழித்து அஜித் ஆளே மாறியுள்ளார்.
சமீபத்தில் அஜித்துடன் ரசிகர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.