Connect with us

நடிக்க வந்து 20வது வருடத்தை நெருங்கிய தனுஷ்

cinema news

நடிக்க வந்து 20வது வருடத்தை நெருங்கிய தனுஷ்

கிராமத்து காவியங்களாக இயக்கி கொண்டிருந்த கஸ்தூரி ராஜா, முதன் முதலில் நகரத்து சாயலில், டீன் ஏஜ்ல தப்பு பண்றவங்கள பற்றி எடுத்த திரைப்படம் துள்ளுவதோ இளமை.

இந்த படத்தில் தனுஷ் மிக சின்ன வயதாக மீசை கூட சரியாக அரும்பாத வயதில் நடித்திருப்பார். இவருக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருந்தார். இந்த படம் தனுசுக்கு பெரிய பெயரை கொடுத்தது.

இருப்பினும் அதன் பின்னர் வெளிவந்த அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படமே தனுஷ்க்கு மிகப்பெரும் பெயரை பெற்று கொடுத்தது. தொடர்ந்து திருடா திருடி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக நடித்து தள்ளினார் தனுஷ்.

இதனால் மிக பிரபலமடைந்து சூப்பர் ஸ்டார் வீட்டிலேயே சம்பந்தம் முடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். சூப்பர் ஸ்டாரின் மகளை திருமணம் செய்தார். தனுஷின் மார்க்கெட் விறு விறு என ஏறியது.

இன்று தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இன்றோடு தமிழ் சினிமாவில் தனுஷ் நுழைந்து 20 வருடங்களாகிறது. அவரது தமிழ் சினிமா பிரவேசத்துக்கு அவரது அண்ணன் செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More in cinema news

To Top