Latest News
ஆசிட் கேனை வெட்டிய வாலிபர் வெடித்து சிதறி பலி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் காலனியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் அப்பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரின் கடையில் அருகில் உள்ள மகா ஜனம்பாக்கம் காலனியை சேர்ந்த சுகுமார் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று காலையில் வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று மதியம் அங்கு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் கிடந்த ஆசிட் கேன் ஒன்றினை திறக்க முயற்சி செய்தார்.
திறக்க முடியாமல் போகவும் உடனே கத்தியை வைத்து அந்த அந்த கேனை கீறியவுடன் அது அப்படியே வெடித்து சிதறியதில் சுகுமார் தூக்கி வீசப்பட்டார்.
ஆசிட் கேன் திறந்து நீண்ட நாட்களாகி விட்ட நிலையில் அதில் இருந்து கியாஸ் பார்ம் ஆகி இருந்துள்ளது.ஆசிட் கட்டியாகி இருந்திருக்கிறது சுகுமார் வேகமாக திறக்கவும் அது அழுத்தத்தில் வெடித்துள்ளது.
இந்நிலையில் அங்கு விரைந்த தூசி போலீசார் சுகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆசிட் கேன் வெடித்ததால் சுகுமாரின் உடல் சிதறியது குறிப்பிடத்தக்கது.
