cinema news
அச்சமுண்டு அச்சமுண்டு பட இயக்குனரின் கோபம்
அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படம் சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. கொஞ்சம் ஹாரர் கலந்து குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக இப்படம் இயக்கப்பட்டிருந்தது. இப்படம் பற்றி இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்யநாதன் கருத்து கூறியுள்ளார்.
குழந்தைகள் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி வரும் இந்த நேரத்தில் அருண் வைத்யநாதன் இந்த கருத்தை கூறியுள்ளார். அவர் கூறிய கருத்து இதோ.
அச்சமுண்டு அச்சமுண்டு படத்துலேயே, இது போன்ற அயோக்கியத்தனங்களுக்கு தண்டனையை சொல்லியாச்சு – அங்கேயே சுடணும்! அவ்ளோ தான்!!! இது தான் எப்பவும், எங்கேயும், யாரு செஞ்சுருந்தாலும் என்னோட கருத்து.இவ்வாறு அருண் வைத்யநாதன் கூறியுள்ளார்.