ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த சென்னிமலையில்தான் புகழ்பெற்ற கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய ஸ்வாமிகள் எழுதி வெளியிட்டார்.
அனுதினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்லும் இந்த சென்னிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கொண்டு செல்லும், பால் , தயிர் பொருட்களை வைத்து அபிசேகம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அபிசேக நேரங்களில் மட்டும் பக்தர்களின் பொருட்களை வைத்து அபிசேகம் செய்யாமல் பல நேரங்களில் அபிசேகம் என்று எல்லா பக்தர்களின் அபிசேக பொருட்களையும் கலந்து அபிசேகம் செய்வதால் முருகன் சிலை தொடர்ந்து சேதமடைந்து வருவதாக ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
இதனால் மாவட்ட அமைச்சர் முத்துசாமி நேற்று கோவிலில் ஆலோசனை நடத்தினார். இதன்படி பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை வைத்து அபிசேகம் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் உற்சவருக்கு பால் அபிசேகம் நடத்த தடை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.