Abirami venkatachalam met sherin mother – தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அபிராமி.
இவர் நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிராமி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மோகன் வைத்தியா, சாக்ஷி, சாண்டியின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை சந்தித்து பேசினார். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்னும் பிக்பாஸ் வீட்டிலிருக்கும் அவரின் நெருங்கிய தோழியான ஷெரினின் தாயை அவர் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘ஷெரி பேபி. உன் அம்மாவை சந்தித்தேன்’ என பதிவிட்டுள்ளார்.