கவின் -லாஸ்லியா இடையே காதலா? – மனம் திறக்கிறார் அபிராமி

264

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிராமி மற்றும் கவின் இடையேயான நட்பு குறித்து நடிகை அபிராமி பேட்டி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கவின் சென்றதும் அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால் அனைவருடனும் நெருக்கமாக பழகினார். அதேநேரம் கவினின் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக அபிராமியும் கூறினார். ஆனால், தொடக்கத்தில் அபிராமியுடன் நெருக்கம் காட்டிய கவின், அதன்பின் சாக்‌ஷியிடம் நெருங்கி பழகினார். அதன்பின் லாஸ்லியாவிடமும் பழகினார். எனவே, அவர் யாரை காதலிக்கிறார் என்பது அவருக்கே குழப்பமாக இருந்தது. ரசிகர்களும் குழப்பம் அடைந்தனர். பிக்பாஸ் வீட்டிலிருந்து சாக்‌ஷிமியும், அபிராமியும் தற்போது வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் அபிராமி அளித்த பேட்டியில் ‘கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. லாஸ்லியா எனக்கு தங்கை மாதிரி. நான் உனக்கு அக்காவாக இருப்பேன் என அவரிடம் அப்போதே சொல்லி விட்டேன். நாங்கள் நிறைய விஷயம் பேசினோம். அவைகள் தனிப்பட்டவை. வெளியே கூற முடியாது’ என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  மீண்டும் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்தியா - பரபரப்பு வீடியோ