பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகை அபிராமி நடிகை சாக்ஷியை சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே அபிராமி, சாக்ஷி, ஷெரின் ஆகியோர் நெருங்கிய தோழிகளாக மாறினர். அதன் பின் கவினை அபிராமி காதலித்தார். ஆனால், கவின் சாக்ஷியிடம் நெருக்கமாக பழகினார்.
தன்னை கவினிடமிருந்து சாக்ஷியே பிரித்தார் என கருதிய அபிராமி சாக்ஷியுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். எவிக்ஷன் நாமினேஷனில் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நாமினேஷன் செய்தனர். ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து சாக்ஷி வெளியேறிய போது அபிராமி அவரை கட்டிபிடித்து கண்ணீர் வடித்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அபிராமி வெளியேறினார். தற்போது சாக்ஷியை சந்தித்த அவர் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.