Bigg Boss Tamil 3
அஜித்தை மீண்டும் பார்க்க முடியுமா தெரியவில்லை – அபிராமி ஏக்கம்
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்துடன் நடித்தது பற்றி நடிகை அபிராமி தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை அபிராமி நடித்திருந்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.
இந்நிலையில், அஜித்துடன் நடித்த அனுபவம் பற்றிஅவர் கூறியதாவது:
எங்கள் கவனம் எப்போது அஜித் சாரின் மீதே இருக்கும். இதை அவர் கவனித்து விடுவார். என்னிடம் பேசும் போது ஜி ஜி என்றே அழைப்பார். அது என்ன ‘ஜி’. என்னை அபிராமின்னே கூப்பிடுங்க எனக்கூறினேன். அதற்கு அவரோ எல்லாருக்கும் மரியாதை கொடுக்கணும் என்று சொல்லுவார். அவரிடம் மறுபடி பேச முடியுமா என தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.