இது போதும்! வெறென்ன வேண்டும்.. ரசிகர்களுடன் நேர்கொண்டபார்வை பார்த்த அபிராமி

இது போதும்! வெறென்ன வேண்டும்.. ரசிகர்களுடன் நேர்கொண்டபார்வை பார்த்த அபிராமி

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள அபிராமி அப்படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 8ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அபிராமி நடித்துள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட 3 பெண்களில் ஒருவராக அவர் நடித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக அப்படம் வெளியான போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். எனவே, இப்படத்தின் வெற்றியை அவரால் அனுபவிக்க முடியவில்லை. நேர்கொண்ட பார்வை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிராமி நேற்று சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ‘நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு களித்தார்’ அதன்பின் ரசிகர்கள் பலருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ‘ வேறென்ன வேண்டும்.. தமிழா… தமிழச்சிக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

What more do I need …. 🙏🏻 my tamizha tamizhachi nandri nandri … NERKONDAPAARVAI en VAAZHKAIPAADAI…

A post shared by Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on