பிக்பாஸில் நான் பங்கேற்கவில்லை- நடிகர் அபிஹாசன் விளக்கம்

21

கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடிகர் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் அபி ஹாசன். இவர் நடிகர் நாசர் , கமீலா தம்பதிகளின் மகனாவார்.

தற்போது பிக்பாஸ் சீசன் துவங்கி விட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் வருகிறார் இவர் வருகிறார் என இஷ்டத்துக்கு யூகங்கள் கிளம்பி வருகின்றன. டிக் டாக் செய்யும் ஜிபி முத்து, சூர்யா கூட வருகிறார் என கிளப்பி விடப்பட்டது.

இப்படியாக பிக்பாஸ் வீட்டுக்குள் யார் யார் செல்லப்போகிறார்கள் என்ற விசயம் ரசிகர்களுக்கு மிகுந்த ஆவலை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் அபிஹாசனும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என மீடியாக்கள் கிளப்பி விட்ட நிலையில் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் அபி ஹாசன், தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தனது சமூகவலைதள பக்கம் மூலம் உறுதியாக கூறிவிட்டார்.

பாருங்க:  தமிழக மக்களுக்கு எச்சரிக்கை - 14 மாவட்டங்களில் கனமழை