எங்கும் எதிலும் அபர்ணா பாலமுரளி

எங்கும் எதிலும் அபர்ணா பாலமுரளி

சூரரை போற்று படம் வந்தாலும் வந்தது படத்தின் கதைக்கு பிறகு படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளியை பற்றிய விமர்சனங்கள் வந்தது. சமூக வலைதளங்களிலும் அபர்ணா பாலமுரளியை பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது.

அபர்ணா பாலமுரளி மாதிரி மனைவி வந்தா எப்படி இருக்கும் என காமெடிக்காக மீம்ஸ்கள் எல்லாம் கிரியேட் செய்து வருகிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

சிலர் அபர்ணாவின் முதுகை புகழ்ந்து போற்றி எழுதி வருகிறார்கள். சிறந்த முதுகு அழகி என அபர்ணாவை போற்றி புகழ்கிறார்கள்.

அபர்ணாவை பற்றிய புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்கிறார்கள். போகின்ற நிலையை பார்த்தால் அடுத்த இரு வருடங்களில் தமிழ் சினிமாவில் அபர்ணாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.