கடந்த நவம்பர் 10ல் வெளியானது சூரரை போற்று திரைப்படம் இந்த படத்தில் கதைக்கு பிறக்கு அதிகம் பேசப்பட்டவர் நடிகை அபர்ணா பாலமுரளிதான். கேரளத்து அழகியான அபர்ணா பாலமுரளிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.
சூரரை போற்று படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் அபர்ணா பாலமுரளி கூறி இருப்பதாவது,
சூரரை போற்று படத்துக்கு முன்னால் எனக்கு பிடித்த கதாபாத்திரத்துல மட்டுமே நடிச்சுருக்கேன்.
இனி ஏனோ தானோன்னு நடிச்சா ரசிகர்கள்கிட்ட எடுபடாது. சவாலான கதாபாத்திரத்திலும் என்னால் நடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை சூரரை போற்று படம் தந்தது. எதிர்மறை கதாபாத்திரமா இருந்தாலும் இறங்கி ஆட முடிவெடுத்துட்டேன் என அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.