சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளிவந்துள்ள படம் சூரரை போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 10 ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.
படத்தை பலரும் பாராட்டி தள்ளி வருகிறார்கள் நெடுமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யாவின் நடிப்பை புகழாதவர் யாரும் இருக்க முடியாது. படத்தை பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஸும் படத்தை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
சூர்யாவின் நடிப்பை பாராட்டிய ஐஸ்வர்யா ராஜேஸ் அபர்ணாவின் நடிப்பை பாராட்டி இருக்கிறார். இதற்கு தேங்க் யூ டார்லிங் என அபர்ணா நன்றி தெரிவித்துள்ளார்.