Connect with us

ஆவின் நெய் மூலம் மட்டுமே கோவில் பிரசாதம்- ஜனவரி 1 முதல் அமல்

Entertainment

ஆவின் நெய் மூலம் மட்டுமே கோவில் பிரசாதம்- ஜனவரி 1 முதல் அமல்

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிப்பது, விளக்கு ஏற்றுவதற்கான வெண்ணெய், நெய் ஆகியவற்றை ஜன.1-ம் தேதி முதல் ஆவின் நிறுவனம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளகோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள், இதர தேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் பொருட்களைகொள்முதல் செய்ய உத்தரவிடுமாறும், ஆவின் நிறுவனத்தில் 15 மி.லி. பேக்கிங்கில் இருந்து 20 கிலோ வரையிலான எடை கொண்ட பேக்கிங் வரை விற்பனைக்கு தயாராக உள்ளன என்றும் ஆவின் மேலாண்மை இயக் குநர் கடிதம் எழுதியுள்ளார்.

சுற்றுச்சூழல் மாசு

கோயில் கருவறை, பிரகாரங்களில் தரமற்ற நெய்யை பயன்படுத்தி விளக்கு, தீபம் ஏற்றுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தவும், கோயில்களில் விளக்கு ஏற்றுவது, நைவேத்திய பிரசாதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை வரும் ஜன.1-ம் தேதி முதல் ஆவின் நிறுவனம் மூலமாக மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

பாருங்க:  தமிழகத்தில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் ஆலோசனை!
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top