Entertainment
கணவரால் கைவிடப்பட்ட பெண்- இன்ஸ்பெக்டர் ஆனார்
கேரள மாநிலத்தில் வர்க்கலாவை சேர்ந்தவர் ஆனி சிவா. கல்லூரியில் படித்தபோது தன் உடன் படித்தவரையே காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர் திருமணம் செய்ததால் ஆதரவின்றி இருந்தார். இந்த நிலையில் கட்டிய கணவனும் இவரை கைவிட , சில நாட்கள் ஐஸ்க்ரீம், இளநீர் விற்று பிழைத்து வந்தார்.
தன்னம்பிக்கையின் சிகரமான ஆனி சிவா மிகுந்த மன உறுதியுடன் போராடி தேர்வு எழுதியும் நிறைய பயிற்சிகளில் கலந்தும் இன்ஸ்பெக்டர் ஆனார்.
தற்போது தான் இருந்த ஊருக்கே இன்ஸ்பெக்டர் ஆக இவர் வந்திருக்கிறார். இன்று இவர்தான் மீடியாக்களில் கவனம் பெற்றுள்ளார்.
