Entertainment
ஆலு போஸ்தோ சாப்பிட விமான ஓட்டிகளுக்கு தடை
ஆலு போஸ்தோ எனப்படும் உணவு கொல்கத்தாவில் மிக புகபெற்ற உணவாகும். இந்த ஆலு போஸ்தோ உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும்.
இந்த உணவை சாப்பிட ஏன் தடைவிதிக்கப்பட்டுள்ளது என பார்ப்போம். விமான ஓட்டிகள் அனைவருக்கும் இனிமேல் போதை மருந்து சோதனை கட்டாயம் என சிவில் விமான போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்தில் பணியாற்றும் கண்ட்ரோலர்கள், ஊழியர்கள் பலருக்கும் போதை மருந்து சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களுக்கு கொல்கத்தாவின் பிரபல உணவான ஆலு போஸ்தோ சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலு போஸ்தோவில் கசகசா சேர்க்கப்பட்டுள்ளதாம் இந்த கசகசா அபின் செடியில் இருந்து எடுக்கப்படும் விதை என்பதால் ஆலு போஸ்தோ சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
