மயிலாடுதுறையில் உள்ளது புகழ்பெற்ற தருமபுரம் ஆதினம் மடம். இந்த மடத்தின் கீழ் இந்த பகுதியின் பல நூற்றுக்கணக்கான கோவில்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியான தலைமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் ஸ்வாமிகளை திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று ஆதினத்தை சந்தித்து பக்திப்பரவசமாக காட்சியளித்துள்ளார்.
இந்த வாரம் முழுவதும் இந்த புகைப்படத்தை வைத்தே திமுக எதிர்ப்பாளர்கள் மீம்ஸ் கிரியேட் செய்து விடுவார்கள் என்பது உண்மை.