பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், ஹிந்தி நடிகர் சைஃப் அலிகான் இருவரும் இணைந்து ராமாயண கதை ஒன்றில் நடித்து வருகின்றனர். ஆதிபுருஷ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் ராவணனாக நடிக்கும் சைஃப் அலிகான் ராவணனை நல்லவனாக மனிதாபிமானம் உள்ளவனாக இப்படத்தில் காண்பிக்க இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறினார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சைஃப் அலிகான் அதற்கு மன்னிப்பும் கேட்டு விட்டார்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்த ஹிமான்ஷு வாஸ்தவா என்ற வழக்கறிஞர் ஜான்பூர் நீதிமன்றத்தில் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதிபுரூஷ் படத்தில் ராவணனாக நடிக்கும் சைப் அலிகான் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகிறார். படமும் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. எனவே படத்தை தடை செய்வதோடு, நடிகர் சைப் அலிகான், படத்தின் இயக்குனர் ஓம் ராவத் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.