cinema news
ஆதி லிங்குசாமி இணையும் படம்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் பொத்தினேனி இவரை வைத்து தெலுங்கில் ஒரு படம் தயாராகிறது. தமிழில் அதிரடிக்கு பெயர் போன லிங்குசாமி இப்படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் நதியா, கீர்த்தி ஷெட்டி உள்ளிடோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் அருண் விஜயிடம் அணுகப்பட்டது. இந்நிலையில் அருண் விஜய் இல்லாமல் வில்லனாக நடிக்க ஆதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் அதிரடிக்கு பெயர் போன லிங்குசாமியின் படம் என்பதால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.