முடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு போறீங்களா? அப்போ ஆதார் கார்டு கட்டாயம்!

545
saloon shops
saloon shops

கொரொனா காரணமாக, தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் மேலும் சில கடைகள் செயல்படலாம் என்று அறிவித்துயிருந்த நிலையில், அழகு நிலையங்கள், சலூன் கடைகள் மற்றும் ஸ்பா செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முடிவெட்ட, ஷேவ் செய்ய சலூன் கடைகளுக்கு வரும் வாடிகையாளர்கள் ஆதார் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று கொரொனா தடுப்பு சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பை சுற்றறிக்கையாக மாவட்ட ஆட்சியாளர்களூக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், சலூன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றையும் கடை உரிமையாளர்கள் குறித்து வைத்து கொள்ள வேண்டும் என்றும், கிருமிநாசினி கொண்டு கடைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், சலூன் கடை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஒரு வாடிக்கையாளர்க்கு பயன்படுத்திய துண்டு, மேலங்கி போன்ற பொருட்களை சலவை செய்த பிறகே மற்றவருக்கு பயன்படுத்த வேண்டும் போன்ற அதிரடியான கட்டுப்பாடுகளை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பாருங்க:  கொரோனாவிடம் இருந்து தப்பிக்க - இந்தியாவில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நகரங்கள்