உலகளவில் கொரொனா தாக்கத்தால் பல்வேறு சரிவுகளை அனைத்து நாடுகளுமே சந்தித்து வருகின்றது. குறிப்பாக கல்வி, பொருளாதாரம், அன்றாட வாழ்வாதாரம் சார்ந்த சிரமங்கள் போன்ற மனரிதீயான பிரச்சனைகளையும், வாழ்வாதாரம் சார்ந்த சரிவுகளையும் சமாளிக்க நம்மை நாமே தயார்ப்படுத்தி வருகின்றோம் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும், மேலும், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கல்வி நிலையங்கள் பள்ளி திறந்ததும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்ததை அடுத்து, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.