தமிழக பாஜக தலைவர் பதவியில் யார் நியமிக்கப்படவுள்ளார் என்கிற செய்தி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
கடந்த சில வருடங்களாக தமிழக பாஜக தலைவர் பதவியில் தமிழிசை சவுந்தரராஜன் பணியாற்றி வந்தார். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என அவர் திசைகள் தோறும் முழங்கி வந்தார். அவரின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில், திடீரென அவர் தெலுங்கனா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எனவே, தமிழக பாஜக தலைவராக அடுத்து யார் நியமிக்கப்பட இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த பதவிக்கு ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன்,சி.பி.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், ஏ.பி. முருகானந்தம், நயினார் நாகேந்திரன் என பலரின் பெயர் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், ஏ.பி.முருகானந்தம் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக் தற்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இவர் பாஜக இளைஞரணியின் தேசிய துணை தலைவர் ஆவார். மேலும், பாஜக அகில இந்திய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.