முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு 800 என்ற திரைப்படம் தயாரிக்கப்பட இருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல அழுத்தங்கள் தரப்பட்டன.
இதன் காரணமாக விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினார். இந்நிலையில்
இதுகுறித்து முத்தையா முரளிதரன் அளித்த பேட்டியில், திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளதாகவும் அவருக்கு அதிக அழுத்தங்கள் வந்த காரணத்தினால் படத்திலிருந்து நின்று விடுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறினார்.
மேலும் கொரோனா பரவம் முடிந்த பிறகு தனது சுயசரிதையை கருவாக கொண்ட படம் நிச்சயம் திரைக்கு வரும் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

