800 பட விவகாரம் வைரமுத்துவுக்கு ரசிகரின் நறுக் கேள்வி

26

800 பட விவகராம்தான் கடந்த வாரம் முதல் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. 800 என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்ததில் இருந்து பல தமிழ் அமைப்புகள், மற்றும் திரையுலகை சேர்ந்த சில தமிழ் உணர்வாளர்கள் இந்த படத்தை எதிர்த்து வருகின்றனர்.

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு எதிராக பேசியவர் இலங்கை போரின் போது சிங்களர்களுக்கு ஆதரவாக கருத்து கூறியவர் என்பது தமிழர் அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டு.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை முத்தையா முரளிதரன் மறுத்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது என இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கெளதமன், நாம் தமிழர் சீமான் என பலரும் தீவிர எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்துவும் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கூறியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் வைரமுத்து அவர்கள் லைகா தயாரித்த எந்த படத்திலும் பாட்டு எழுதவில்லையா என கேட்டுள்ளார். லைகா என்பது இலங்கை நபர் ஒருவரால் நடத்தப்படும் கார்ப்பரேட் கம்பெனியாகும்.

பாருங்க:  உலக மகளிர் தினம் 2019; தமிழக தலைவர்கள் வாழ்த்து!