Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

cinema news Entertainment Latest News Tamil Cinema News Tamil Flash News tamilnadu தமிழ் ஃபிளாஷ் நியூஸ்

80வயது பாட்டிக்கு வீடியோ காலில் இன்ப அதிர்ச்சி கொடுத்த மோகன்லால்

மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் மோகன்லால். இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் மலையாள திரையுலகில் உள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் பலருக்கும் மோகன்லால் நடிப்பு பிடிக்கும் தமிழில் கோபுர வாசலிலே, சிறைச்சாலை,ஜில்லா, உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் மோகன்லால்.

எண்ணற்ற ரசிகர்களை கைவசம் வைத்துள்ள மோகன்லாலுக்கு கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள ஒரு பாட்டியும் ரசிகை. ருக்மிணி அம்மாள் என்ற அந்த பாட்டி  மோகன்லால் பற்றியே எந்த நேரமும் பேசியதால் பலரால் கேலி செய்யப்பட்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட மோகன்லால் அந்த பாட்டியை வீடியோ காலில் நேரில் அழைத்து பேசியுள்ளார். இதனால் சந்தோஷப்பட்ட அந்த பாட்டி அழுதுகொண்டே மோகன்லாலிடம் பேசியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.