புயல் எதிரொலி- 8 ராணுவ குழு சென்னை வருகை

புயல் எதிரொலி- 8 ராணுவ குழு சென்னை வருகை

சென்னை மற்றும் வட மாவட்டங்களை நிவர் என்னும் புயல் மிரட்டி கொண்டிருக்கிறது. இப்புயலால் பலத்த சேதம் ஏற்படும் என்பதால் அரசு இயந்திரம் துரித கதியில் இயக்கி விடப்பட்டுள்ளது.

இன்று இரவு மரக்காணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே  புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலால் சென்னையும் மற்ற ஊர்களும் பாதிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் 8 ராணுவ குழுக்கள் தமிழகம் வர இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் கூறியுள்ளார்.