57 வருட முயற்சிக்கு கிடைத்த பரிசு – 74 வயதில் இரட்டை குழந்தை பெற்ற மூதாட்டி

222

74 வயதுள்ள மூதாட்டி ஒருவர் கருவுற்று இரட்டை குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் மருத்துவ உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ ராவ்(80). இவரின் மனைவி எர்ராமட்டி மங்கம்மா (74). இவர்களுக்கு கடந்த 1962ம் ஆண்டு திருமனம் நடந்தது. அனால், 57 வருடங்களாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, இது தீராத மனக்குறையாகவே அவர்களுக்கு இருந்து வந்தது.

ஆனாலும், ஒருபக்கம் தொடர்ந்து குழந்தைக்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு மாதவிட்டாய் நின்றுவிட்டதால் கருமுட்டைகள் உருவாக வாய்ப்பு கிடையாததால், கருமுட்டை தானம் பெற்று அவரின் கணவரின் உயிரணுவோடு சேர்த்து ஊசி மூலம் கர்ப்பப்பையில் செலுத்தி மருத்துவர்கள் வெற்றிகரமாக மங்கம்மாவை கருத்தரிக்க வைத்தனர்.

இந்நிலையில், மங்கம்மாவுக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. இது மருத்துவ உலகில் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

பாருங்க:  கமல்ஹாசன் எழுதிய ஊரடங்கு பாடல்! பாடியுள்ள பிரபலங்கள்!