Tamil Flash News
71 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு 71 ஜோடிகளிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திருமணம் நடைப்பெற்றது.
தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் தேனி மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடுகள் நடைப்பெற்றது.
திருமண நிகழ்ச்சியில் துணை முதலமைச்சருடன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேளதாளம் முழங்க 71 வகையான சீர் வரிசையுடன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்.