7 பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை- முதல்வர்

7 பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை- முதல்வர்

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் பள்ளர் சமுதாயத்தை மட்டும் இருக்க கூடாது தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி,  குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் உள்ளிட்ட பிரிவுகளையும் சேர்த்து ஒரே பிரிவாக தேவேந்திர குல வேளாளர் என பெயரிட வேண்டும் என சில அமைப்பினர் கூறி வந்தனர்.

இதற்காக தமிழக அரசு ஒரு குழு வைத்திருந்த நிலையில் குழுவின் பரிந்துரையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்ட அறிக்கை.

தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று “தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட” மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.