இந்திய கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் வீரராக இருந்தவர் அருண்லால். இந்திய கிரிக்கெட் அணியில் 1982ம் ஆண்டு சேர்ந்தவர். 16 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து விளையாடியுள்ள அருண்லால் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் பிறந்த இவர் தேயிலை தோட்டத்தில் பணியாற்ற வந்து கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்.
1996ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர் அதற்கு பிறகு முழு நேர வர்ணணையாளராக இருந்து வருகிறார்.
இவர் தனது மனைவியை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்த நிலையில் தற்போது இவருக்கு 66 வயதாகிறது. இந்த நிலையில் புல் புல் சாஹா என்ற ஆசிரியையை காதலித்த இவர் இன்று அந்த ஆசிரியையை திருமணம் செய்து கொண்டார். அந்த ஆசிரியைக்கு வயது 38 ஆகும்.