கரையான்கள் மிக ஆபத்தான ஒரு உயிரினமாகவே கருதப்படுகிறது. இதனால் மக்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் உடைமைக்கு என்றும் ஆபத்துதான். பல மரச்சாமான்களை கரையான் அரித்து தின்று விடும் எவ்வளவு உயர்ந்த மரச்சாமானாக இருந்தாலும் அதற்கு தெரியப்போவதில்லை .
அதேபோல் பேப்பர்களை கரையான் அரிக்கும். அதுவும் பணத்தை கரையான் அரித்தால் அவ்வளவுதான். ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜமாலையா வங்கிக்கணக்கு இல்லாததால் தனது வீட்டில் இரும்பு பெட்டியில் 5 லட்சம் வரை சேர்த்து வைத்துள்ளார். வீடு கட்டும் ஆசையில் சேர்த்து வைத்து இருந்திருக்கிறார்.
இதை அறியாத கரையான் 5 லட்சத்தையும் அரித்து தின்றுவிட்டது வருத்தத்திற்குரிய விசயமாகும் இதனால் விவசாயி கலங்கி போய் இருக்கிறார்.