Entertainment
இன்றுடன் 55 வருடங்களை கடந்த புகழ்பெற்ற அதே கண்கள் திரைப்படம்
கடந்த 1967ம் ஆண்டு மே மாதம் 26ம் நாள் வெளியான திரைப்படம் அதே கண்கள். இப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், மற்றும் பலரானோர் நடித்து இருந்தனர்.
இந்த படம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைத்து கட்டி போட்டது எனலாம். குறிப்பாக படத்தில் முகமூடி அணிந்து வரும் வில்லன் யார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருந்தது.
க்ளைமாக்ஸில் தான் இவரா வில்லன் என்கிற அளவுக்கு ஆச்சரியம் அளிக்கும் அளவு ஒருவரை வில்லனாக காண்பிப்பார்கள். காட்சிக்கு காட்சி சீட்டின் நுனிக்கு வரவைத்த இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
எம்.ஜி.ஆர் நடித்த அன்பே வா படத்தின் படப்பிடிப்புக்காக ஏவிஎம் நிறுவனம் பிரமாண்டமாக போடப்பட்டிருந்த வீட்டின் ஷெட்டை உடனே கலைக்க மனமில்லாத ஏவிஎம் நிறுவனம் அந்த செட்டில் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் இயக்க அன்பே வா படத்தை இயக்கிய ஏ.சி திருலோகச்சந்தரை வைத்தே இப்படத்தை இயக்கியது.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அழகாக சஸ்பென்ஸாக ஏ.சி திருலோகசந்தர் அமைத்திருந்தார். வா அருகில் வா, பொம்பளை ஒருத்தி இருந்தாளாம், பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி என்ற பாடல்கள் ஹிட் ஆகின.
இன்றும் இந்த படம் ஒரு ஆல்ரவுண்ட் பொழுதுபோக்கு படம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா என ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
