54 வயது ஆசிரியருடன் திருமணம் – 19 வயது பெண் தற்கொலை!

465

54 வயது ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள பழனியாபுரம் காலணியில் வசிப்பவர் துரைசாமி(54). இவர் வாழப்பாடி ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதுரைவீரன் என்பவரின் மகள் காயத்ரி(19) என்கிற இளம்பெண்னை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.  துரைசாமி நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Married woman sucide who married elder man

இந்நிலையில், கடந்த 30ம் தேதி காயத்ரி பழனியாபுரம் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காயத்ரியின் மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பழனியாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  திருமணமாகி ஒரு வாரத்தில் பெண் கொலை - கள்ளக்காதல் காரணமா?