சுஜனா ராவ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. சிவா என்பவர் நடிக்கும் இப்படம் ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது. ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னக மொழிகளிலும், ஹிந்தி மொழியிலும் இப்படம் வெளியாகிறது.
புதுமுகங்கள் அதிகம் நடித்திருக்கும் இப்படத்தின் பெயர் கமணம். இப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 9.09க்கு வெளியாகியுள்ளது.
தமிழுக்கு ஜெயம் ரவியும், ஹிந்திக்கு சோனு சூட்டும், தெலுங்குக்கு பவன் கல்யாணும்,மலையாளத்துக்கு பஹத் பாஸிலும், கன்னடத்தில் சிவராஜ்குமாரும் இப்பட டிரெய்லரை வெளியிடுகின்றனர்.
இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.