Connect with us

45 வருடங்களுக்கு பிறகு தாயுடன் சேர்ந்த மகன்

Entertainment

45 வருடங்களுக்கு பிறகு தாயுடன் சேர்ந்த மகன்

கேரளாவில் விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட நபர் 45 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைச் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 92 வயதான பெண் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் தனது மகனுடன் மீண்டும் இணைந்தார். அந்த நபர் கடந்த 1976 ஆம் ஆண்டில் நடிகர் ராணி சந்திராவை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு அழைத்து வந்த குழுவுடன் சென்றபோது விமான விபத்தில் இறந்ததாக நம்பப்பட்டது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் அந்த நபர் மும்பையில் ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார் என்பதை அவரது தாயார் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டார்.இதனை தொடர்ந்து அவர் கேரளா அழைத்து வரப்பட்டார். தாயும் மகனும் மீண்டும் இணைவதை பார்க்க நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர்.

மேலும் இந்த நிகழ்வின் போது உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் கோவூர் குஞ்சுமோன் உடனிருந்தார். தாய் மகன் இணைந்த மகிழ்ச்சியை அங்கிருந்தவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

பாருங்க:  நெஞ்சம் மறப்பதில்லை டிஜிட்டல் உரிமையை பெற்ற நிறுவனம்

More in Entertainment

To Top