Entertainment
43 ஆண்டுகளை நிறைவு செய்த ப்ரியா திரைப்படம்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1978ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் ப்ரியா. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரனோர் நடித்திருந்தனர்.
க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தை எஸ்.பி முத்துராமன் இயக்கி இருந்தார். எழுத்தாளர் சுஜாதா இந்த கதையை எழுதி இருந்தார்.
இந்த படத்தின் பாடல்கள் தான் தமிழின் முதல் ஸ்டீரியோ ஃபோனிக் ரெக்கார்டிங்கில் வெளிவந்தது. இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்து இருந்தார்.
முக்கியமாக சிங்கப்பூரிலேயே இப்படம் முழுவதும் எடுக்கப்பட்டு அந்நாளைய சிங்கப்பூர் நகரின் அழகை அழகாய் இப்படத்தில் காண்பிக்கப்பட்டது.
இன்றுடன் இப்படம் வெளிவந்து 43 ஆண்டுகளாகிறது குறிப்பிடத்தக்கது.
