Connect with us

40 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வரும் ஸ்வாமிகள் சிலை

Latest News

40 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வரும் ஸ்வாமிகள் சிலை

மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங்கலம். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற ராஜகோபால ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ராமர்,லட்சுமணர், சீதை சிலைகள் கடந்த 1978ம் ஆண்டு திருடு போயின.

சிலை தடுப்பு போலீசார் இவ்வழக்கை கையாண்ட நிலையில் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காத நிலை இருந்தது. கடந்த 1988ம் ஆண்டு நாச்சியார்கோவிலை சேர்ந்த இருவரை பிடித்து விசாரித்த நிலையிலும் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.

சில நாட்களுக்கு முன் லண்டனை சேர்ந்த பாரம்பரிய பொருட்கள் வாங்கி விற்கும் டீலர் ஒருவர் இந்த சிலைகளை விற்பனைக்கு வெளியிட்டு இருந்தார். இதைக்கண்டு சந்தேகமடைந்த ஒருவர் இது ராஜகோபால ஸ்வாமி கோவில் சிலை போல உள்ளதே என தமிழக சிலை கடத்தல் போலீசுக்க்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அது ராஜகோபாலஸ்வாமி கோவில் சிலைகள்தான் என்பதை உறுதிப்படுத்தினர் . பின்னர் சிலை லண்டன் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சிலைகள் டெல்லி வந்து சேர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சிலைகளை வரும் அனுமன் ஜெயந்திக்குள் கோவிலில் பிரதிஷ்டை செய்தால் நன்றாக இருக்கும் என அனந்தமங்கலம் கிராம மக்கள் விருப்பபடுகின்றனர்.

பாருங்க:  களத்தில் சந்திப்போம் ரிலீஸ் தேதி
Continue Reading
You may also like...

More in Latest News

To Top