கடந்த 1982ம் ஆண்டு மே 5ம் தேதி வெளியான திரைப்படம் விசுவின் மணல் கயிறு திரைப்பட. விசு, எஸ்.வி சேகர், கமலா காமேஷ், சாந்தி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் எட்டு கட்டளைகளை போட்டு திருமணம் செய்யும் கதாபாத்திரத்தில் எஸ்.வி சேகர் நடித்திருந்தார். திருமண புரோக்கரான விசு நாரதர் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
எஸ்.வி சேகரின் பொருந்தாத 8 கட்டளைகளை சரி என்று ஏற்றுக்கொண்டு, எஸ்.வி சேகரின் எட்டு கட்டளைகளுக்கு ஏற்ற பெண் என பொய் சொல்லி சாந்திகணேஷை எஸ்.வி சேகருக்கு மணமுடித்து வைக்கிறார் விசு.
கடைசியில் எஸ்.வி சேகர் போட்ட ஒரு கட்டளைக்கு கூட தகுதியில்லாத பெண் என எஸ்.வி சேகருக்கு தெரிய வர அதன் பின் நடக்கும் ரணகளங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
படம் முழுக்க எஸ்.வி சேகர், விசு, கிஷ்மு, மனோரமா, என அனைவரும் கலகலக்க வைத்திருப்பர்.
எம்.எஸ்.வி இசையில் மந்திரப்புன்னகை என்ற பாடல் அனைவரையும் தாலாட்ட வைத்தது என சொல்லலாம்.
இன்றோடு இப்படம் வெளியாகி 40 வருடங்களை கடந்து விட்டது.