35 வருடங்களுக்கும் மேல் விஜிபியில் சிலையாக நின்றவரின் சோக நிலை

35 வருடங்களுக்கும் மேல் விஜிபியில் சிலையாக நின்றவரின் சோக நிலை

ஒரு இடத்தில் சிலையாக நிற்பது என்பது பெரிய விசயம். அதுவும் சிறுவர்களும், பெரியவர்களும் கல கல என்று வந்து போகும் ஒரு இடத்தில் அப்படியே ராஜா போல நிற்பதும் யாரும் பேசினால் எதுவும் பேசாமல் இருப்பதும் சின்ன புன்முறுவல் கூட பூக்காமல் அப்படியே நிற்பதும் கஷ்டமான காரியம்தான்.

என்னதான் மாதச்சம்பளத்துக்கு பணிபுரிந்தாலும் இது கொஞ்சம் கடினமான பணிதான். சென்னையில் உள்ள விஜிபி தங்க கடற்கரைக்கு சென்றவர்கள் இவரை அறியாமல் இருந்திருக்க முடியாது. இவர் பெயர் அப்துல் அஜீஸ் கடந்த 35 ஆண்டுகளாக இவர் சிலை மனிதனாக விஜிபியில் வேலை செய்கிறார் எட்டுமணி நேர பணிதான் இருந்தாலும் கொஞ்சம் கடினமான பணி. இவரை சிரிக்க வைக்க பேச வைக்க முயற்சி செய்வோர் கண்டிப்பாக தோற்றுத்தான் போவர்.

இப்படி பலரை சிரிக்க வைக்க முயற்சி செய்த இவர் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார் இதனால் இவரின் வாழ்வாதாரமான பொருளாதாரம் பாதிக்கப்பட்டு. இதனால் மனச்சோர்வுற்று உடல்நலிவுற்று இருந்தது. இருப்பினும் வேறு ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.

தற்போது கொரோனா தொற்றால் இவர் உயிரிழந்துள்ளார்.