ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குரு சிஷ்யன். கடந்த 1988ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டையொட்டி இந்த திரைப்படம் வெளியானது.
ரஜினிகாந்த், பிரபு, ரவிச்சந்திரன், சோ, ராதாரவி, போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மிகவும் கலர்ஃபுல்லான கமர்ஷியலான படமாக இது வந்திருந்தது, ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு, வா வா வஞ்சி இளமானே, நாற்காலிக்கு சண்டை போடு, உத்தமபுத்திரி நானு, கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் போன்ற பாடல்கள் இப்படத்தில் புகழ்பெற்ற பாடல்களாக இருந்தன.
இளையராஜா இப்படத்துக்கு சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். ரஜினியும் பிரபுவும் சண்டைக்காட்சிகளில் கலக்கி இருந்தனர்.
மனோரமா, பிரபு , ரஜினி, வினுச்சக்கரவர்த்தி இவர்கள் கூட்டணியில் வந்த காமெடியும் புகழ்பெற்றது.
இந்தப்படம் வெளிவந்து நேற்றுடன் 34 ஆண்டுகள் ஆகிறது.