33மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு

33மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு

வங்க கடலில் உருவான புரவி புயல் இலங்கையில் சில இடங்களில் பலத்த வெள்ள சேதத்தை ஏற்படுத்திவிட்டு இந்தியாவின் பாம்பன் பகுதிக்குள் நுழைந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிபயங்கர மழை விடாது பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாளில் மழை இல்லாத ஊர் இல்லை எனலாம். இதற்கு காரணமான புரவி புயல் நேற்று முன் தினமே பாம்பன் -கன்னியாகுமரிக்கு இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே இடத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளதால் மழை விடாமல் பெய்து வருகிறது.

கடந்த 33 மணி நேரமாக ஒரே இடத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார் வளைகுடா, ராமநாதபுரம் கடற்கரையில்  கடந்த 33 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதாக . வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.