Entertainment
30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்
உலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.
சோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
சில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.