30 வருடங்களாக நடந்து வரும் குழந்தை கடத்தல்

30 வருடங்களாக நடந்து வரும் குழந்தை கடத்தல்; அதிரவைக்கும் தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட, விரும்பி ஓய்வு பெற்ற பெண் செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை கடத்தல் பற்றி, அமுதா பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட அமுதா, விசாரணையின் போது, 10 குழந்தைகளை கடத்தி விற்றதாக கூறியுள்ளார். மேலும், 30 வருடங்களாக இந்த கடத்தல் தொழில் நாமக்கலில் நடந்து வருகிறது என்ற தகவலும் பரவி வருகிறது.

இந்த வழக்கில், அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள், கொல்லிமலை மற்றும் ஓமலூர் பகுதிகளில் 3 குழந்தைகளை கடத் விற்பனை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்த கடத்தலுக்கு உதவிய அரசி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், தொடர் விசாரணைகள் அவர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது.