தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
துணை ராணுவத்தினர் போலீஸார் போன்றோர் அதிக அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மது அருந்திவிட்டு அதனால் சிலர் செய்யும் சேட்டைகள் போன்றவற்றை குறைக்கவும் ஒடுக்கவும் தேர்தலுக்கு 3 நாளுக்கு முன்பே மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது.
அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை 04.04.2021 ஞாயிற்றுக்கிழமை முதல் 06.04.2021 அன்று வரை டாஸ்மாக் மூடப்படுகிறது.