Connect with us

Entertainment

29 வருடத்தை கடந்த ராசுக்குட்டி

பாக்யராஜ் நடிப்பில் கடந்த 1992ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம் ராசுக்குட்டி. இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா, கல்யாணக்குமார், செம்புலி ஜெகன், மனோராமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்திருந்தார். ஊரில் கெளரவமான குடும்பத்தை சேர்ந்த பாக்யராஜ் மைனர் போல சுற்றி வருகிறார்.

படித்த பணக்கார பெண்ணாண ஐஸ்வர்யாவை காதலிக்கிறார். திருமணம் வரை செல்லும் நிலையில்  படிப்பறிவில்லாத பாக்யராஜை  திருமணம் செய்ய மறுக்கிறார் ஐஸ்வர்யா.

இதனால் ஏற்படும் குழப்பங்களும் நடுவில் பாக்யராஜ் கல்யாணகுமார், மனோரமா தம்பதிகளின் உண்மையான வாரிசு இல்லை என்ற தகவலும் பாக்யராஜுக்கு தெரிய வருகிறது.

இப்படியொரு சூழலில் பயணிக்கும் கதைதான் இப்படத்தின் கதை.

இந்த படம் மிகப்பெரும் வெற்றிப்படமானது.

இன்றுடன் இப்படம் வெளியாகி 29 வருடங்களை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

பஞ்சு அருணாசலம் தயாரிக்க பாக்யராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்.

பாருங்க:  ரஷ்யாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு

Entertainment

மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

மோகன்லால் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  பழம்பெரும் நடிகை மரணம்
Continue Reading

Entertainment

உதயநிதி படத்தில் வடிவேலு

பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கி வருகிறார். உதயநிதி நடிக்க இருக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் வடிவேலுவும் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் தற்போது வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை நடிகர் வடிவேலு சுமூகமாக தீர்த்துக் கொண்டார்  தற்போது புதிய படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  பட்டப்பகலில் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
Continue Reading

Entertainment

சமுத்திரக்கனியின் சித்திரை செவ்வானம் டிரெய்லர்

சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்த வினோதய சித்தம் படம் சமீபத்தில் வந்தது. ஜீ 5 நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது. இதற்கிடையே மீண்டும் ஒரு புதிய படத்தை அதே சமுத்திரக்கனியின் இயக்கத்தில் இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது.

சித்திரை செவ்வானம் என்ற இப்படத்தில் பாசம் மிகுந்த தந்தையாக தன் மகளை காணாமல் தேடி பரிதவிக்கும் தந்தையாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

கிராமத்து பெரியவராக சமுத்திரக்கனி நடித்து இயக்கி இருக்கும் இப்பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பாருங்க:  சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் : ஊரடங்குக்கு வாய்ப்பு !
Continue Reading

Trending