கடந்த 28.05.1993 அன்று வெளியான திரைப்படம் புதிய முகம்.இந்த திரைப்படத்தில் ரேவதி, சுரேஷ் மேனன் போன்றோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சுரேஷ் மேனனின் ஆக்ஷன் நடிப்பு பலரையும் கவர்ந்தது.
மேலும் இதில் வினீத்,கஸ்தூரி ஜோடியும் நடித்திருந்தது. சுரேஷ் மேனனின் ஆக்சன் நடிப்பை அதுவரை திரையில் யாரும் பார்த்தது இல்லை. மேலும் சாதுவான நடிகையான ரேவதியின் தயாரிப்பில் வரும் படம்தானே அமைதியான படமாக இருக்கும் என காத்திருந்தவர்களுக்கு அது பக்கா ஆக்சன் படமாக வந்திருந்தது.
அப்போதுதான் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் புகழ்பெற்று வந்த நேரம் அதனால் ஏ.ஆர் ரஹ்மானை இசையமைப்பாளராக இந்த படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.
வைரமுத்து எழுதிய பாடல்களில் குறிப்பாக கண்ணுக்கு மை எழுது, ஜூலை மாதம் வந்தால் போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாக ஹிட் ஆகின.
இந்த படம் வெளிவந்து இன்றுடன் 29 வருடங்கள் ஆகிறது.