cinema news
விஜய் ஹீரோவாக நடிக்க வந்து இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவு
சட்டம் ஒரு இருட்டறை, நீதியின் மறுபக்கம், நீதிக்கு தண்டனை , நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகனான விஜய் ஆரம்பத்தில் தன் தந்தையார் இயக்கிய சில படங்களில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜயகாந்த் நடித்த பல படங்களில் விஜயே சிறுவயது சிறுவனாக நடித்துள்ளார்.
எனினும் விஜய் முறைப்படி வயது வந்த உடன் ஹீரோவாக நடித்த படம் நாளைய தீர்ப்பு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்திருந்தார். அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கினார்.
இந்த படத்துக்கு பிறகுதான் விஜய் , ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே, தேவா, வசந்த வாசல் என நடிக்க ஆரம்பித்தார். இதில் விஜய் சங்கவியுடன் நடித்த ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே உள்ளிட்ட படங்கள் கமர்சியல் அம்சங்களுக்காக ஓடியது. பின்பு வந்த பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை இரண்டு படங்களின் அடுத்தடுத்த வெற்றி விஜயை உச்சாணிக்கொம்பில் வைத்தது.
இன்று மாஸ்டர் படம் வரை விஜய் நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்று அசைக்க முடியாத முன்னணி நடிகராக விஜய் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விஜய் நடித்த நாளையதீர்ப்பு வந்த தினம் கடந்த 1992ல் இந்த படம் வந்தது. இன்றுடன் விஜய்யின் நடிப்புக்கு 28வருடம் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.