அமெரிக்காவில் ஒரே நாளில் 2800 பேர் பலி! அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!

1388
worldwide corona
worldwide corona

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால நேற்று ஒரே நாளில் மட்டும் 2800 பேருக்கும் மேல் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45,318ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் புதிதாக 25,985 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா இதுவரை தான் சந்தித்தா எல்லாப் போர்களிலும் இழந்த உயிரிழப்புகளை விட இப்போது அதிகமாக உள்ளது. கொரோனாவால் தினமும் பலியாகும் உடல்களை அடக்கம் செய்வதற்கு கூட முடியாத அளவு உடல்கள் கொத்து கொத்தாக குவிந்து வருவதால் மயான ஊழியர்கள் 24 நேரமும் பணி புரிந்து வருகின்றனர்.

பாருங்க:  கொரோனாவால் 12 பேர் இறந்துவிட்டார்கள் – வாட்ஸ் ஆப்பில் வதந்தியால் பரபரப்பு !